சிம் கார்டு சேவை மையத்தில் தீ விபத்து

ஈரோடு, நவ.13:  ஈரோடு  பன்னீர்செல்வம் பார்க் அருகே உள்ள கச்சேரி வீதியில் தனியார் சிம் கார்டு  சேல்ஸ், வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு  இந்த மையத்தில் உள்ள  பேட்டரியில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து கரும்புகை  வெளியேறியது. இதனால், அங்கிருந்து ஊழியர்கள், பொதுமக்களுக்கு கண்  எரிச்சல், இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த  ஈரோடு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பேட்டரி இணைப்பை துண்டித்து தீயை  அணைத்தனர். பின்னர், புகை போக்கி கருவி மூலம் புகையை வெறியேற்றினர்.  இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம்  நடந்த கட்டிடத்தில் அவசர கால கதவு, ஜன்னல்கள் ஏதும் இல்லாமல், அரசு  விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டதை தீயணைப்பு துறையினர் உறுதி  செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>