கமல்ஹாசன் பிறந்தநாள் மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்ததானம்

காஞ்சிபுரம்: நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் நவ.7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆசிரமங்களில் உள்ளவர்களுக்கு உதவிகள், ரத்த தானம் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியிருந்தார். அதனையேற்று அவரது பிறந்த நாளான நவ.7 ம் தேதி கொண்டாட்டங்களை தவிர்த்து மக்கள்  திண்டாட்டத்தை போக்கும் தினமாக  அறிவித்து காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

Related Stories:

>