×

கண்ணன்கோட்டை நீர்தேக்கம்: கலெக்டர் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கண்ணன்கோட்டை-தேர்வாய் நீர்தேக்கத்தை திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா நேற்று திடீர் ஆய்வு செய்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த கண்ணன்கோட்டையில் 1250 ஏக்கர் பரப்பில் கண்ணன்கோட்டை ஈசா ராஜன் ஏரி, தேர்வாய் ஏரியை இணைத்து சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீரை கொண்டு செல்ல நீர் தேக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு முடிவடையும் தருணத்தில் உள்ளது. இந்த நீர்தேக்க திட்டத்திற்காக கண்ணன்கோட்டையில் மட்டும் சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரூ.380 கோடியிலான இந்த நீர் தேக்க திட்டத்தால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் நீர் தேக்கங்களோடு கூடுதலாக கண்ணன்கோட்டை நீர்தேக்கமும் சென்னைக்கு 1 டி.எம்.சி தண்ணீரை தரும் நீர்ஆதாரமாக சேரும் வகையில் இந்த திட்டம் 2010ம் ஆண்டு துவக்கப்பட்டு தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த நீர்தேக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, திறக்க உள்ள நிலையில் நீர்தேக்க திட்ட இறுதி பணிகளை திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, கண்ணன்கோட்டை நீர் தேக்க திட்ட செயற்பொறியாளர் ந.தில்லைக்கரசி, உதவி பொறியாளர் பா.தனசேகர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : Kannankottai Reservoir: Collector Survey ,
× RELATED கண்ணன்கோட்டை நீர்தேக்கம்: கலெக்டர் ஆய்வு