×

குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வலியுறுத்தல்

விருதுநகர், நவ.12: விருதுநகர் நகராட்சியின் குடிநீர் ஆதாரங்கள் வறண்டு கிடக்கும் நிலையில், தாமிரபரணி கூட்டுக்குடிநீரை நம்பியே தண்ணீர் விநியோகம் உள்ளது. அதனால் நகரில் 5 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று விருதுநகரின் 4,5,9,10 மற்றும் 12வது வார்டுகளை சேர்ந்த மக்கள் நகராட்சியில் திரண்டு ஆணையர் பார்த்தசாரதியிடம் மனு அளித்தனர். மனுவில், நகரில் குடிநீர் விநியோகம் தற்போது 20 நாட்கள் வரை ஆகிறது. அடிகுழாய், சின்டெக்ஸ் டேங்க் போர்வெல்களில் பெரும்பகுதி பழுதாகி உள்ளது. நகராட்சி நிர்வாகம் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீருக்கு குடங்களுடன் வீதியில் திரியும் அவல நிலையை போக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிகுழாய், மின்மோட்டர் குழாய்களை பழுது நீக்கம் செய்யவும், அதுவரை லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...