தீபாவளி பர்சேஸ் திரளும் கூட்டத்தால் திணறி வரும் தேனி

தேனி, நவ. 12: தீபாவளி பண்டிகை நாளை இரவு தொடங்கி சனிக்கிழமை  கொண்டாடப்பட உள்ளது. இதனால் தீபாவளிக்கு வேண்டிய ரெடிமேட் ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், சமையல் பொருட்கள் வாங்குவதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேனிக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்து குவிய தொடங்கியுள்ளனர். தீபாவளிக்கு இன்றும், நாளையும் என இரண்டு தினங்களே உள்ளன. எனவே, தீபாவளிக்கு பொருட்களை பர்சேஸ் செய்ய நேற்று மாலை தேனி  நகர் மதுரை சாலை,  கம்பம் சாலை, பெரியகுளம் சாலை  மற்றும் எல்மால் தெரு,  பகவதி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.  இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மக்கள் கூட்டம் அதிகரித்து இருந்ததைப் பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை  காட்டுவதை  தடுப்பதற்காக  காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதன் மேலே போலீஸ் அமர்ந்து  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>