×

இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் படகுகளை மீட்க கோரிக்கை

தொண்டி, நவ.12: தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை அரசு கைது செய்து படகுகளை பறிமுதல் செய்தது. இதில் மீனவர்களை சில நாள்களில் விடுதலை செய்தது. படகுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த து படகுகளையும் உடைக்க நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018ம் வருடம் நம்புதாளையை சோந்த ஆறுமுகம், பழனி மற்றும் கிருஷ்ணன் ஆகியோரின் படகுகளை விடுவிப்பதாக ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்நாள் முதல் இந்நாள் வரையிலும் இந்த படகுகளை மீட்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் உடைக்க உள்ள படகுகளில் தங்கள் படகுகளும் உள்ளனவோ என்ற அச்சத்தில் உள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மீனவர்களின் படகுகளை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் மீனவர் சங்க தலைவர் ஆறுமுகம் கூறியது, நம்புதாளையை சேர்ந்த மூன்று பேரின் படகுகளை இலங்கை அரசு விடுவித்து விட்டது. இரண்டு வருடமாக நாங்களும் படகை மீட்க அனைத்து அதிகாரிகளையும் நாடியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. உடைக்க உத்தரவிட்டுள்ள படகோடு எங்கள் படகுகளையும் உடைத்து விடுவார்களோ என்று பயமாக உள்ளது, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகளை இழந்து வாழவும், வழி இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். கலெக்டர் மற்றும் அதிகாரிகள் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Sri Lanka ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...