×

உயர் மின்அழுத்த கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

உசிலம்பட்டி, நவ.12: உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்தக்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கு போர்வெல் அமைப்பதிலும், கிணறு தோண்டுவதிலும் சிக்கல் ஏற்படும். விவசாய நிலங்களின் மதிப்பு குறைவதுடன், இப்பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலையும் ஏற்படும். எனவே இந்த பணியை நிறுத்தி பூமிக்கடியில் மின் வயர்களை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று விவசாயிகள், உயர்மின் அழுத்தக்கோபுரம் அமைக்கும் அரசு பொறியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இடையே உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் ஆர்டிஓ ராஜ்குமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

Tags : tower ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...