×
Saravana Stores

திருச்சி சூரியன் எப்.எம் சார்பில் பண்டிகை நேரத்திற்கான கொரோனா விழிப்புணர்வு

திருச்சி, நவ. 12: கொரோனா ேநாய் தொற்றின் காரணமாக கடந்த 8 மாதங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்த மக்கள் தற்போது கிடைத்துள்ள சில தளர்வுகளின் காரணமாக வெளியில் வர துவங்கி உள்ளனர். மக்களின் மிக முக்கிய மகிழ்ச்சிகளில் ஒன்று குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாடுவது. தீபாவளி பண்டிகையையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
மக்களின் நலனில் என்றும் அக்கறையுடன் பல்வேறு விஷயங்களை செய்து வரும் நமது சூரியன் எப்எம் 93.5 தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு மக்கள் மத்தியில் எஸ்எம்எஸ் உடன் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளான என்எஸ்பி ரோடு, பெரிய கடைவீதி, மலைக்கோட்டை, சத்திரம் பஸ் நிலையம், மத்திய பஸ் நிலையம், ரயில்வே ஜங்ஷன் போன்ற அனைத்து பகுதிகளிலும் தன்னார்வலர்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது SMS (Soap, Mask, Social) இவற்றுடன் தீபாவளியை கொண்டாடும் விதம் பற்றி விளக்கப்படுகிறது. முக்கியமாக பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பாக வெடிப்பது, பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, வெடி பொருட்களை வெடித்த பிறகு மறக்காமல் கைகளை சோப்பு போட்டு நன்றாக சுத்தமாக கழுவுவது என அனைத்து விஷயங்களை பற்றியும் எடுத்து சொல்வதோடு மக்கள் கூடும் இடங்களில் முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு இலவசமாக முக கசவம் வழங்குவது, சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ளசெய்வது போன்ற விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்து வருகிறது. சூரியன் எப்எம் இந்த சமூக அக்கறையுடன் கூடிய முயற்சிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Tags : Trichy Sun FM ,
× RELATED மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் 266 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்