×

நீடாமங்கலம் கீழப்பட்டு கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செயல்விளக்கம்

நீடாமங்கலம், நவ.12: கீழப்பட்டு விவசாயி சத்தியபிரகாஷ் வயலில் மண்ணியல்துறை உதவி பேராசிரியர் அனுராதா தலைமையில் இந்த செயல்விளக்கம் நடந்தது. அப்போது உதவி பேராசிரியர் அனுராதா கூறுகையில், நேரடி நெல் விதைப்புக்கு குறைந்த அளவு விதையை பயன்படுத்தி பாய் நாற்றங்கால் அமைத்து விதைப்பு செய்யலாம். 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுகளை குத்துக்கு ஒரு நாற்று வைத்து நடவு செய்து கோனாவிடர் என்னும் களை கருவியை உபயோகித்து மண்ணை கிளறி விட்டு களையை கட்டுப்படுத்தலாம். நீர், மறைய நீர் கட்ட வேண்டும்.

இதனால் குறைந்த அளவு விதை செலவு, நாற்றங்கால் பராமரிப்பு செலவு குறைவு, குறைந்த நாற்று வைப்பதில் பக்க தூர்கள் அதிகரிக்கும். அதிக இடைவெளியில் நடுவதால் ஆள் எண்ணிக்கை குறைவு ஏற்படும், குறைந்த நீர் செலவு, குறைந்த உரம், பூச்சிக் கட்டுப்பாட்டுடன் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்றார். செயல்விளக்கத்தில் வேளாண் விஞ்ஞானிகள் ராதாகிருஷ்ணன், சபாபதி, செல்வமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதுநிலை ஆராய்ச்சியாளர் விஜிலா செய்திருந்தார்.

Tags : paddy sowing demonstration ,village ,Needamangalam ,
× RELATED நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில்...