×

நியாய விலை கடைகளுக்கு 100 சதவீத பொருட்கள் வழங்க வலியுறுத்தி வாயிற் கூட்டம்

திருவாரூர், நவ.12: நியாயவிலை கடைகளுக்கு 100 சதவிகித பொருட்கள் வழங்கக்கோரி கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வாயிற் கூட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் இருந்து வரும் நியாயவிலை கடைகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 100 சதவிகிதம் வழங்கிட வேண்டும், பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு அறிக்கையினை அமல்படுத்த வேண்டும், வருங்கால வைப்பு நிதியை வங்கியில் முதலீடு செய்திட வேண்டும் மற்றும் தீபாவளி போனஸ் தொகையாக 20 சதவிகிதம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் வாயிற் கூட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ தொழிற் சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,price shops ,
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...