×

கலெக்டர் பேச்சு தஞ்சை- மயிலாடுதுறை இடையே 70 கி.மீட்டர் மின்சார ரயில் பாதையை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

தஞ்சை, நவ. 12: ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், டீசல் பயன்பாடு மற்றும் செலவினத்தை குறைக்கவும் ரயில் பாதைகள் மின்மயமாக்கும் பணிகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி மெயின் லைனில் விழுப்புரத்திலிருந்து- தஞ்சாவூர் வரை 228 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ள ரயில் பாதையில் மின்சார ரயில் இயக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக விழுப்புரம்- கடலூர் இடையே பணிகள் நிறைவு பெற்றது. பின்னர் கடலூர்- மயிலாடுதுறை இடையே இரண்டாவது கட்டமாக பணிகள் நடந்தது. பின்னர் மூன்றாவது கட்டமாக மயிலாடுதுறை- தஞ்சாவூர் இடையே 70 கி.மீட்டருக்கு ரூ.320 கோடி மதிப்பீட்டில் மின்சார ரயில் இயக்க பணிகள் துவங்கியது.

இதில் தஞ்சை- மயிலாடுதுறை இடையே மின் கம்பங்கள் நடப்பட்டும், அதற்கான மின்கம்பிகள் இழுத்தும் கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று கடந்த அக்டோபர் 16ம் தேதி மின்சார ரயில் இன்ஜின் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதைதொடர்ந்து இந்த வழிதடத்தில் தற்போது சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பயணிகள் ரயில் இயக்க ஏதுவாக நேற்று காலை தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை வரை புதிதாக அமைக்கப்பட்ட மின்சார ரயில் பாதையில் பணிகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய், கோட்ட ரயில்வே மேலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ரயில்வே அலுவலர்கள் ஆய்வு செய்தனர். இதையடுத்து விரைவில் மின்சார பாதையில் தஞ்சை- மயிலாடுதுறை இடையே பயணிகள் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Collector ,Safety Commissioner ,Mayiladuthurai ,Tanjore ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில்...