×

மயிலாடுதுறையிலிருந்து தஞ்சைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்

மயிலாடுதுறை, நவ.12: மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயில் வழிப்பாதையை முற்றிலும் மின்மயமாக்கும் பணிகளை ரயில்வே துறையினர் மும்முரமாக செய்து வருகின்றனர். விழுப்புரத்திலிருந்து கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரையிலும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை என 228 கி.மீ தூரத்திற்கு மின்மயமாக்கும் பணியை ரூ.250 கோடி மதிப்பீட்டில் ரயில்வே நிர்வாகம் ரயில்வே விகாஸ் லிமிடெட் செய்து வருகிறது. திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம் வரை மின்மயமாக்கல் பணிகள் முடிவு பெற்று ரயில் சேவை துவங்கப்பட்டுவிட்டது.

மயிலாடுதுறையிலிருந்து தஞ்சை வரையிலான 70கி.மீ தூரத்திற்கு மின் மயமாக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அதை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று காலை தஞ்சை ரயில்நிலையத்திலிருந்து மயிலாடுதுறைக்கு ஆய்வு வண்டி புறப்பட்டு மதியம் 3 மணிக்கு மயிலாடுதுறையை அடைந்தது. பின்னர் மயிலாடுதுறையில் இருந்து மாலை 4.50 மணிக்கு அதிவேக சோதனை ஓட்டம் 8 ரயில் பெட்டிகள் கொண்ட வண்டியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மற்றும் அதிகாரிகள் தஞ்சைக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags : Mayiladuthurai ,Tanjore ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று...