டூவீலர் சென்டர்மீடியனில் ேமாதி விவசாயி பரிதாப பலி

அரவக்குறிச்சி, நவ.12: அரவக்குறிச்சியை அடுத்த சீத்தப்பட்டிகாலனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நிலைதடுமாறி சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அரவக்குறிச்சியை அடுத்த புங்கம்பாடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) கோபிநாத்(34), விவசாயி. இவர் சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். சீத்தப்பட்டி காலனி அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானார். விபத்தில் கோபிநாத் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோபிநாத் இறந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>