தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 31 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

காங்கயம், நவ.12: தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. வியாபாரிகள் பட்டாசு கடைகள் திறப்பதற்கு அனுமதி கேட்டு வந்தனர். பட்டாசு கடை வைக்க 32 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர், தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், காங்கயம் தாசில்தார் சாந்தி ஆகியோர், காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதியில் கடைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் நிரந்தர கடைகள் 26, தற்காலிக கடைகள் 5 என மொத்தம் 31 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். விற்பனை செய்பவர்கள் கடையில் தீயணைப்பு சாதனங்கள், பட்டாசுகளை வெடித்து காட்டக்கூடாது. எலக்ட்ரிக் சுவிட்சுகள் பழுதில்லாமல் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அரசு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Related Stories:

>