×

கோர்ட் உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும்

ஈரோடு, நவ. 12:  தீபாவளி பண்டிகையின் போது நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: தீபாவளிநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில் பட்டாசுகளை வெடிப்பதால், நம்மை சுற்றி உள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன.

பட்டாசு வெடிப்பதால், எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால் சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே ஈரோடு மாவட்டத்தில் கோர்ட் உத்தரவுப்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை என நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்ககூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் அருகில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு