×

தூத்துக்குடி நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்க வருகைதரும் முதல்வருக்கு வழிநெடுகிலும் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்எல்ஏ ஏற்பாடு

தூத்துக்குடி, நவ.11: தூத்துக்குடி நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்க வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சென்டா மேளத்துடன் பிரமாண்ட வரவேற்பு மற்றும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்டச் செயலாளர்களான அமைச்சர் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன் எம்எல்ஏ இணைந்து ஏற்பாடுகள் செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இன்று (11ம் தேதி) காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினருடன் விவாதிப்பதுடன், மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றுகிறார்.

 முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி விமானநிலையம் வந்திறங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் சென்றார். அங்கு நடைபெற்ற  ஆய்வுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தூத்துக்குடிக்கு இன்று காலை வருகிறார். கன்னியாகுமரியில் இருந்து கார் மூலமாக தூத்துக்குடி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்கையான வல்லநாட்டில் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுகவினர் சென்டா மேளம், வானவேடிக்கை முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலம், 3வது மைல் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ஆகிய  இடங்களிலும் மற்றும் வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

 முதல்வர் வருகையை முன்னிட்டு நெல்லை கே.டி.சி நகரில் இருந்து தூத்துக்குடி வரையிலும் சாலைகளின் இருபுறமும் அதிமுக கொடிகள் நடப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் வரவேற்பு பதாகைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 3 முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி ஆய்வுக்கூட்டத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. முதல்முறை பிரதமர் மோடியுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் செய்வதற்காகவும்,  2வது முறை முதல்வரின் தாயார் மறைவு  காரணமாகவும், 3வது முறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை காரணமாகவும் ஆய்வுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு கடந்த 3 ஒத்திவைக்கப்பட்ட ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடியில் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்து.

 பாக்ஸ்...முதல்வர் வேட்பாளரான பிறகு முதல் வருகை
 அதிமுகவின் முதல்வர்  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு முதல்முறையாக தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பாக  வரவேற்பு அளிக்க குறிப்பாக முதல்வர் செல்லும் வழிநெடுகிலும் சாலையின்  இருபுறமும் தொண்டர்கள் வரவேற்கும் வகையில் பலத்த ஏற்பாடுகளை ஏற்பாடுகளை  வடக்கு செயலாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்டச் செயலாளர்  எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. இணைந்து செய்துள்ளனர். இதனிடையே முதல்வர்  வருகையால் தூத்துக்குடி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வர்  வருகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள்  பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags : Kadampur Raju ,events ,districts ,Chief Minister ,North and South ,AIADMK ,Tuticorin ,
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை