புதுவை என்ஆர் காங்., எம்எல்ஏவுக்கு கொரோனா சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

வில்லியனூர், நவ. 11: புதுவை மங்கலம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ சுகுமாறனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுவை மாநிலம் மங்கலம் தொகுதியில் அனந்தபுரம், உறுவையாறு, கீழ்அக்ரஹாரம் ஆகிய இடங்களில் கடந்த 5ம்தேதி பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்புவிழா நடந்தது. இந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம், என்ஆர் காங்கிரசை சேர்ந்த தொகுதி எம்எல்ஏ சுகுமாறன் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இந்நிலையில் தொகுதி எம்எல்ஏ சுகுமாறனுக்கு நேற்று முன்தினம் தொண்டைவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>