×

7 மாதமாக சம்பளம் நிறுத்திவைப்பு துப்புரவு பணியாளர்கள் ‘ஸ்டிரைக்’

தர்மபுரி, நவ.11: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 30க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவரிடம் பல முறை வலியுறுத்தியும், புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், தீபாவளிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சம்பளம் தரக் கோரி துப்புரவு பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டுள்ளனர். ஆனால், பஞ்சாயத்து தலைவர் சம்பளம் வழங்க மறுத்ததோடு இம்மாத சம்பள பணம் மட்டுமே வழங்க முடியும். நிலுவை சம்பளத்தை தரமுடியாது எனக் கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள், ஒகேனக்கல் பேருந்து நிலையம் முன்பு நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தகவல் அறிந்த கூத்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, சம்பள பணம் முழுவதையும் வாங்கி தருவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் ேபரில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து