×

மாசற்ற தீபாவளியை கொண்டாட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

நாமக்கல், நவ.11: நாமக்கல் மாவட்டத்தில் மாசற்ற தீபாவளியை கொண்டாட, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கலெக்டர் மெகராஜ் கேட்டுக்கொண்டுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும், நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்களும் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்பிற்குள்ளாகின்றனர். திறந்தவெளியில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுப்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மாசற்ற தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் 56 பேருக்கு கொரோனா நாமக்கல், நவ.11: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று கல்லூரி பேராசிரியர்கள் உள்பட 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,651 ஆகும். இதுவரை 9,101 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 452 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags : Immaculate Diwali ,
× RELATED தமிழக அரசு அனுமதி வழங்கிய நேரத்தில்...