ஏற்காட்டில் சந்தன கட்டைகள் பதுக்கிய கூலி தொழிலாளி கைது

ஏற்காடு, நவ.11: ஏற்காட்டில். சந்தன கட்டைகளை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஏற்காடு புளியங்கடை கிராமத்தைச் சேர்ந்தவர் மலையன் மகன் இளையராஜா(31). கூலித்தொழிலாளியான இவர், சந்தன மரங்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஏற்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், நேற்று காலை இளையராஜா வீட்டில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு பதுக்கி வைத்திருந்த 60 கிலோ சந்தன கட்டைகளை கைப்பற்றி, இளையராஜாவை கைது செய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்த சந்தன மரக்கட்டைகளை ஏற்காடு ரேஞ்சர் சுப்பிரமணியனிடம் போலீசார் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இளையராஜா சந்தன மரங்களை கேரளாவில் வாங்கி, ஏற்காட்டிற்கு பஸ்சில் கொண்டு வந்ததும், அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>