×

காரியாபட்டி 4வது வார்டில் தண்ணீர் தொட்டியில் பராமரிப்பு பணி

காரியாபட்டி, நவ. 11:  தினகரன் செய்தி எதிரொலியாக காரியாபட்டி 4வது வார்டில் பழுதான தண்ணீர் தொட்டியில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட அச்சம்பட்டி 4வது வார்டு முத்தாலம்மன் கோயில் அருகேயுள்ள குடிநீர் குழாய், நாகம்மாள் கோயில் அருகேயுள்ள ஆழ்குழாய், அச்சம்பட்டி, மயானத்தில் உள்ள குளியல் தொட்டிகள் ஆகியவை கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் அன்றாடம் தேவைக்கு கூட தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தினர்.

குறிப்பாக மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு 1 கிமீ தூரத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்த செய்தி நேற்று தினகரனில் படத்துடன் வெளியானது இதன் எதிரொலியாக நேற்றே பேரூராட்சி நிர்வாகம் சின்டெக்ஸ் தொட்டியை பராமரிப்பு பணி செய்தது. தொடர்ந்து குடிநீர் குழாய், குளியல் தொட்டிகள் பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியின் தண்ணீர் பிரச்னையை உணர்ந்து செய்தி வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்த பேரூராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : Kariyapatti 4th Ward ,
× RELATED காரியாபட்டி 4வது வார்டில் அடிப்படை வசதிகள் `அவுட்’