×

தேனி மாவட்டத்தில் சினிமா தியேட்டர்கள் திறப்பு இல்லை

தேனி. நவ. 11: தேனி மாவட்டத்தில் 23 சினிமா தியேட்டர்கள் உள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் நவ.10 முதல் கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள் திறந்த நிலையில், தேனி மாவட்டத்தில் 23 சினிமா தியேட்டர்களும் நேற்று திறக்கப்படவில்லை. இது குறித்து சினிமா தியேட்டர் மேலாளர் ஒருவர் கூறுகையில், ‘சினிமா தியேட்டரை எப்படி திறக்க வேண்டும், ரசிகர்களை எப்படி அனுமதிக்க வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து பெரியகுளம் மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களில் கோட்டாட்சியர்கள் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

ரசிகர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோவிட் 19 நெறிமுறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. புதிய திரைப்படங்களும் வரவில்லை. திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிவடைந்து வருகிற தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்ப்பு உள்ளது. எனவே  தீபாவளிக்கு திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்தார்.

Tags : Cinema theaters ,district ,Theni ,
× RELATED தேனி மாவட்டத்தில் ஏப்.23-ல் உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்!