தீபாவளி கூட்டத்தை கண்காணிக்க போலீஸ் கூண்டு அமைப்பு

போடி, நவ. 11: தீபாவளி பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி போடியில் காமராஜர் சாலை, பெரியாண்டவர் நெடுஞ்சாலை பகுதிகளில் சாலையோர கடைகள் அமைத்து விற்பனை செய்வர். தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடுவர். இதை சாதகமாக பயன்படுத்தி, சமூக விரோதிகள் பெண்கள் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடக் கூடும். இதை தடுக்கும் விதைமாக டிஎஸ்பி பார்த்திபன் உத்தரவின்பேரில், நகர போலீசார்கள் இரு சாலைகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்கும் விதமாக உயரமான கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>