×

தீபாவளி பண்டிகையால் மாற்றம் தேனி வாரச்சந்தை வெள்ளிக்கிழமை கூடுகிறது

தேனி, நவ. 11: தேனியில் உள்ள பெரியகுளம் சாலையில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச்சந்தை கூடும். இச்சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள், வீட்டு உபயோக சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக, சந்தையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும். தேனி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வர். இந்நிலையில், வருகிற சனிக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், வெள்ளிக்கிழமையை வாரச்சந்தையை நடத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, தீபாவளிக்கு வேண்டிய காய்கறிகள், மளிகைப் பொருள்களை வெள்ளிக்கிழமை பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Tags : festival ,Deepavali ,Theni ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...