கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியோடு கற்க ஆசிரியர்கள் புன்னகையோடு செல்லுங்கள்

காரைக்குடி, நவ.11:  காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் கல்வியியல் கல்லூரிகளின் 11வது பட்டமளிப்பு விழா இணையதளம் வழியாக நடந்தது. இருபாலர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பட்டங்களை வழங்கி பேசுகையில், ஆசிரியர் பாடங்களை வாழ்க்கையோடு இணைந்ததாக நடத்த வேண்டும். அறிவை மட்டும் போதிக்காமல், மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மனதளவில் திடமாகவும், தன்னம்பிக்கையோடும் இக்கால தொழில் நுட்பத்திற்கு ஏற்றார் போல்  தயார் படுத்த வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறைக்கு செல்லும் போது புன்னகையாடு செல்ல வேண்டும் அப்போது தான் மாணவர்கள் மகிழ்ச்சியோடு கற்பார்கள். மாணவர்கள் எதிர்பார்ப்பதை கொடுப்பவர்களாக ஆசிரியர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். கற்றலுக்கு தகுந்த வளங்களை ஆசிரியர்கள் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுதான் அவர்களின் கற்றலை மேன்மையடைய செய்யும். வருங்காலத்தில் தொழில்நுட்பத்தின் தாக்கம் மேலும் சிறந்து விளங்கும் என்றார். பட்டம் பெறும் ஆசிரிய மாணவர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றார்.     

பல்கலைக்கழக தரம் பெற்ற மாணவர்களுக்கு நேரடியாக பட்டம் வழங்கப்பட்டது.   

Related Stories: