கால்நடை ஏலம் திடீர் நிறுத்தம் வாக்குவாதத்தால் பரபரப்பு

காரைக்குடி, நவ.11: காரைக்குடி அருகே செட்நாட்டில் கால்நடை பண்ணை உள்ளது. இங்கு பண்ணை பயன்பாட்டுக்கு தேவைப்படாத விலங்குகளை (கழிவு செய்யப்பட்ட விலங்குகள்) பொது ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்த 9ம் தேதி ஏலத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் நேற்று ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் பண்ணை பயன்பாட்டுக்கு தேவைப்படாத 55 மாடுகள், 38 ஆடுகள், 17 வெண் பன்றிகள் ஏலம் விடப்பட்டது. 17 விலங்குகளுக்கான ஏலம் விடப்பட்ட நிலையில் ஒருபிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டு அதிகாரிகள் ஏலத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>