×

டி.கல்லுப்பட்டியில் பரபரப்பு யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை ரெய்டு ஆணையாளரிடம் பணம் பறிமுதல்

பேரையூர், நவ.11: டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஆணையாளர் உள்ளிட்டோரிடம் இருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுட்டனர். அப்போது கிராம ஊராட்சி ஆணையாளர் அழகு பாண்டியிடம் ரூ.30 ஆயிரமும், டிரைவர் தங்கம் என்பவரிடம் ரூ.21 ஆயிரமும் மற்றும் வாகனம், அலுவலகங்களில் இருந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இது கணக்கில் வராத லஞ்சமாக பெற்ற பணம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆணையாளர் (கி.ஊ) அழகுபாண்டி, டிரைவர் தங்கம், உதவியாளர் அருண் பிரகாஷ் ஆகிய 3 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Anti-Corruption Raid Commissioner ,office ,D.Kallupatti ,Tension Union ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...