×

தாரகை குரூப்ஸ் பெண் காவலருடன் தகராறு

அறந்தாங்கி, நவ.11: அறந்தாங்கியில் பெண் காவலருடன் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் பாலா(25). இவர் அறந்தாங்கியில் போக்குவரத்து பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அறந்தாங்கி பெரியகடைவீதியில் பணியில் இருந்த போது, அறந்தாங்கி களப்பக்காடு சிலோன் காலனியை சேர்ந்த மதன் வீரன் என்பவர் ஒரு வழிச்சாலையில் செல்ல முயன்றார். அப்போது பாலா ஒரு வழிச்சாலையில் செல்ல கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்|த மதன்வீரன் நான் அதிமுக காரன் உன்னை டிரான்ஸ்பர் செய்து விடுவேன் மிரட்டியுள்ளார். மேலும் காவலரை போட்டோ எடுத்து வாட்ச்அப்பில் பதிந்துள்ளார். இது குறித்து பாலா கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து மதன் வீரனை கைது செய்தனர்.

வாலிபர் கைது கொள்ளையன் செல்வராஜ்
பல்வேறு கொள்ளை வழக்கில் சிறையில் இருந்த தேவகோட்டை பகுதியைச்சேர்ந்த சுரேஷ் என்பவன் பரோலில் வெளியே வந்துள்ளான். இதன் பின்னர் தனது பெயர் உள்ளிட்ட அனைத்து அடையாள சான்றுகளையும் காஞ்சிபுரம் முகவரியில் செல்வராஜ் என்று பெயர் மாற்றி வாங்கி வைத்துள்ளார். பொன்னமராவதி பகுதியில் மூதாட்டி உள்ளிட்ட 4பேரை கொலை செய்து தங்கம் வைரம் நகைகளை கொள்ளையடித்துச்சென்றுள்ளார். அப்போது பொன்னமராவதி போலீசார் சாமத்தியமாக அந்த கொள்ளையனை பிடித்து மீண்டும் மதுரை சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Taragai Group ,guard ,
× RELATED இலங்கைக்கு படகில் கடத்திய ரூ.400 கோடி...