×

பெரம்பலூர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

பெரம்பலூர்,நவ.11:பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை விப த்தில்லாத ஒலி, சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கலெக்டர்  வெங்கட பிரியா வேண்டு கோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உச்சிநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தமிழக அரசு கடந்த 2018, 2019 ஆம் ஆண்டுகளில் தீபாவளிப் பண்டிகையன்று காலை 6மணிமுதல் 7மணி வரையும், இரவு 7மணி முதல் 8மணி வரையில் மட் டுமே பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயயித்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டை போலவே காலை 6 முதல் 7மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மேலும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுற்றுச் சூழலைக் காப்பது நமது கடமையும் பொறுப்பும் ஆகும். எனவே இதனை பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் பட்டாசு வெடிப்பதற்கு முயற்சிக்கலாம். குழந்தைகள் பெரியவர்களின் கண்காணிப்பில் பட்டாசு வெடிப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சர வெடிகளைத் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், குடிசைகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Deepavali ,district ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...