×

கலெக்டர் வேண்டுகோள் குற்ற சம்பவங்களை தடுக்க உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

பெரம்பலூர், நவ.11: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நகரின் முக்கிய இட ங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என பெரம்பலூர் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : தீபாவளிப் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் பண்டிகை கொண்டாட தேவையான பொ ருட்கள் வாங்க நகரங்களிலும் முக்கிய இடங்களிலும் அதிகமாக கூடுவதால், அங்கு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதைக் கருத் தில் கொண்டு பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அதற்கான தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இதன்படி பெரம்ப லூர் நகரத்தில் பொதுமக் கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையின் மூலம் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறு திசெய்யும் வகையிலும், குற்ற சம்பவங்களைத் தடு க்கும் வகையிலும் தொடர்ந்து கண்காணிப்பு பணி யில் காவல்துறையினர் ஈ டுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பெரம்பலூரில் புது பஸ்டாண்டு, பழைய பஸ் டாண்டு,பெரிய கடைவீதி ஆகிய இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் நகருக்கு பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் அதிகப் படியான நகைகளை அணிந்து வரவேண்டாம். தெரி யாத நபர்கள் தங்களது குழ ந்தைகளுக்கு ஏதேனும் இனிப்புகள் கொடுத்தால் அ தனை குழந்தைகள் சாப்பிடக் கூடாது என பெற்றோர் அறிவுறுத்திட வேண்டும். பேருந்தில் பயணம் செய் யும் போது தங்களது உடை மைகளை கையில் பத்திர மாக வைத்துக்கொள்ள வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார் பாக கேட்டுகொள்கிறோம். மேலும் அவசர உதவி மற் றும் பாதுகாப்பிற்கு பொது மக்கள் மாவட்ட காவல் கட் டுப்பாட்டு அறைஎண் 100ஐ தொடர்பு கொண்டு புகார் களைத் தெரிவிக்கலாம். இ ந்தத் தீபாவளிப் பண்டிகை யானது பொதுமக்கள் எவ்வித அச்சமின்றியும், குற் றமில்லாத பண்டிகையாக கொண்டாட காவல்துறை சார்பாக அனைத்துப் பாது காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் காவ ல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என பெரம்பலூர் எஸ்பி நிஷா பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது