×

வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் பனை விதை நடவு பணி

வேதாரண்யம்,நவ.11: வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் பனை விதை நடவு பணி நடந்தது. வேதாரண்யம் தாலுகா, வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் மற்றும் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) உத்தரவின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மண் அரிப்பு மற்றும் இயற்கை பேரழிவிலிருந்து தடுப்பதற்கு பாதுகாப்பு கவசமாக, வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் இரண்டு மாத காலமாக பொதுமக்களிடம் ஒரு லட்சம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டு ஒரு பனை விதைக்கு 1 ரூபாய் வீதம் பனை விதை வாங்கப்பட்டு நடவும் பணி கடந்த 7ம் தேதி முடிவுற்றது. இது குறித்து வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, எங்கள் ஊராட்சி கடற்கரை சார்ந்த ஊராட்சியாக இருப்பதால் பனை விதைகளை நடுவதன் மூலமாக இயற்கை பேரழிவு அரணாக இருக்கும். இந்த சிறப்பான திட்டத்தை செயல்படுத்தியதற்காக வெள்ளப்பள்ளம் ஊராட்சி பொதுமக்களின் சார்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் ஏனைய அரசு அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்தார்.

Tags : Vellapallam ,
× RELATED வேதாரண்யம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை