தீபாவளி தற்காலிக கடைகளில் விற்பனை இன்று துவக்கம்

கரூர், நவ. 11: ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு கரூர் நகரம் முழுவதும் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பரபரப்புடன் இயங்கத் தொடங்கி விடும். கடந்த ஒரு சில ஆண்டுகளூக்கு முன்பு வரை அனைத்து தரைக்கடைகளும், ஜவஹர் பஜார், ஈஸ்வரன் கோயில் வளாக பகுதி போன்ற பகுதிகளில் செயல்பட்டு வந்தன. இதனையடுத்து அனைத்து கடைகளும் ஒரே பகுதியில் செயல்படும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவர் மைதானத்தில் கடைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.

இதற்காக கடந்த சில நாட்களாக வள்ளுவர் மைதானத்தில் கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வள்ளுவர் மைதானத்தில் தற்காலிக தரைக்கடைகள் இயங்கத் துவங்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தரைக்கடைகளுக்கு வாடகை நியாயமான முறையில் வசூல் செய்யப்பட வேண்டும் எனவும் வியாபாரிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாடகை உயர்வு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரிகள் போர்க்கொடி தூக்கிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

Related Stories:

>