மாநகராட்சியை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம்

திருப்பூர், நவ.11:  திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 1 முதல் 15 வரையுள்ள பகுதிகளில், சீராக குடிநீர் விநியோகிக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில், முதலாம் மண்டல அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கோரிக்கைகள் அனைத்தும் மனுவாக மண்டல துணை பொறியாளர் சந்திரசேகரனிடம் அளிக்கப்பட்டது.

Related Stories:

>