×

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையின்றி இரண்டாம் சீசன் நிறைவு


ஊட்டி, நவ. 11: நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாட்டு சுற்றுலா  பயணிகள் வராமலேயே இம்முறை இரண்டாம் சீசன் நிறைவடைந்தது. ஆண்டு தோறும்  செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரண்டாம் சீசன் அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை காட்டிலும்,  வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக  காணப்படும். குறிப்பாக, வெளி நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவு வருவார்கள்.  சில சமயங்களில் இவர்கள் டிசம்பர் மாதம் வரையிலும் வருவது வழக்கம். பொதுவாக  இவர்கள் பெரிய குழுக்களாக வருவார்கள்.

மேலும், இவர்களது மூதாதையர்கள் இங்கு  வாழ்ந்த நிலையில், அவர்கள் வாழ்ந்த இடங்கள் மற்றும் கல்லறைகளை காண  வருவதும் வாடிக்கை. கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வர  தடையிருந்தது. கடந்த மாதம் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டு இ பாஸ் முறையில் வரலாம்  என அனுமதி வழங்கியபோதிலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் வர  முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த 50 ஆண்டுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் வராமலேயே இரண்டாம் சீசன் நிறைவடைந்தது இந்த ஆண்டு தான் என  சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வராத  நிலையில், அவர்களை நம்பியே உள்ள வழிகாட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : season ,arrival ,
× RELATED 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள்...