×

பனி கொட்டுவதால் விவசாயிகள் அச்சம்

ஊட்டி, நவ. 11:மழை குறைந்த நிலையில், நீலகிரியில் இரவு நேரங்களில் நீர் பனி கொட்டுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதிலும் மழை குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதியில் மழை முற்றிலும் குறைந்துள்ளது. அதேபோல், மேக மூட்டமும் இன்றி வானம் தெளிவாக காட்சியளித்தது. இதனால், நேற்று முன்தினம் இரவு நீர் பனி கொட்டியது. கடந்த சில நாட்களாக மேக மூட்டம் மற்றும் மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் பனி பொழிவு துவங்கியுள்ளதால், தேயிலை மற்றும் மலை காய்கறி செடிகளை நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேேபால், தேயிலை செடிகள் கருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இம்முறை நீர் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இரவு நேரங்களில் குளிர் அதிகமாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக, அதிகாலை நேரங்களில் பனி மூட்டம் மற்றும் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், தேயிலை தோட்டம், மலை காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்