மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி, நவ. 11:  மின் வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, திட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மோகன், சண்முகமணி, சுப்பிரமணி, அறிவுமணி, பாலசுப்பிரமணியம், சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், தன்னிச்சையாக 10 சதவீத போனஸ் அறிவித்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். போனஸ் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும். மின்வாரிய ஊழியர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷம் எழுப்பினர்.

Related Stories:

>