தீபாவளிக்கு மஞ்சள் மார்க்கெட் 4 நாட்கள் விடுமுறை

ஈரோடு, நவ. 11: ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு வருகின்ற 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு நகரின் அனைத்து மஞ்சள் மார்க்கெட் ஏலங்களில் வணிகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். 17ம் தேதி முதல் மஞ்சள் வர்த்தகம் வழக்கம்போல் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>