×

வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் கொடைவிழா துவக்கம்

உடன்குடி,நவ.10: பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயிலில் கொடை விழா கடந்த 8ம்தேதி துவங்கியது. இதையொட்டி அம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். இன்று (10ம் தேதி) காலை 10மணிக்கு 108 பால்குட பவனி, மதியம்  1 மணிக்கு மஞ்சள் பெட்டி எடுத்தல், சிறப்பு அலங்கார தீபாராதனை, கும்பம் வீதியுலா, இரவு 9மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கிளி வாகனத்தில் அம்மன் பவனி நடைபெறும். நாளை (11ம் தேதி) நண்பகல் 12 மணிக்கு மகா அலங்கார தீபாராதனை, மஞ்சள் நீராட்டு, இரவு 7மணிக்கு மாவிளக்கு வழிபாடு, இரவு 9மணிக்கு கரகாட்டம், நள்ளிரவு 12மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அம்மன் பவனி நடைபெறும். வரும் 12ம்தேதி காலையில் கொடை விழா நிறைவு பூஜை நடக்கிறது.
 ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் வட்டன்விளை தெற்கு தெரு மக்கள் செய்துள்ளனர்.

Tags : Wattanvilai Mutharamman Temple Donation Ceremony ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...