சங்கராபுரம் அருகே பரபரப்பு பூட்டிய வீட்டை திறந்து 25 பவுன் கொள்ளை

சங்கராபுரம், நவ. 10:  சங்கராபுரம் அருகே பூட்டிய வீட்டை திறந்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்அலி (46). வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊருக்கு வந்து வசித்து வருகிறார். கடந்த 6ம் தேதி ஜாபர்அலி தனது குடும்பத்தினருடன் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாபர்அலி மட்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே அறையில் சென்றுபார்த்தபோது, அங்கிருந்த மரபீரோ திறந்த நிலையில், துணிமணிகள் சிதறிக் கிடந்தது. மேலும், அதில் இருந்த 25 பவுன் நகை, 2 வைர தோடு கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும்.இதுகுறித்து ஜபார்அலி சங்கராபுரம் போலீசில் புகார் அளித்தார். வீட்டின் பூட்டும், பீரோவும் உடைக்கப்படாமல் திறந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதால், தெரிந்த நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories:

>