பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை

வேட்டவலம், நவ.10: வேட்டவலம் மாதாகோயில் தெருவை சேர்ந்தவர் இருதயதேவஆனந்த், பெயின்டர். இவரது மனைவி ரேணுகாம்பாள். வர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருதய தேவஆனந்த் கடந்த 4 ஆண்டுகளாக உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் நிலத்திற்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் நிலத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது, இருதயதேவ ஆனந்த் மரத்தில் தூக்கு போட்டு தொங்கியபடி சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்எஸ்ஐ தனசேகரன் ஆகியோர், அங்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரேணுகாம்பாள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உடல்நிலை பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Stories:

>