பிரசவத்தின் போது பெண், குழந்தை மரணம் அரசு மருத்துவமனை டாக்டர் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

சாத்தூர், நவ.10: சாத்தூர் அமீர்பாளையத்தைச் சேர்ந்த தூய்மை தொழிலாளர் முருகேசனின் மனைவி பாண்டீஸ்வரி(21). தலைப்பிரசவத்திற்காக கடந்த 30ம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதன் பின் அதிகமான ரத்தப்போக்கினால் பாண்டீஸ்வரி உயிரிழந்தார். பிரசவத்தின் போது உயிரிழந்த பாண்டீஸ்வரி, அவரது குழந்தை இறப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு மருத்துவமனையில் சரியாக பிரசவம் பார்க்கத் தவறிய டாக்டர், செவிலியர்களையும் கைது செய்யக் கோரியும் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார், மாவட்ட துணைச்செயலாளர் மாரிமுத்து, அமைப்பு செயலாளர் ஆறுமுகம் முன்னிலையில் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்ேபாராட்டத்தில் பாண்டீஸ்வரி குடும்பத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: