×

தேவதானப்பட்டி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் விவசாயிகள் கவலை

தேவதானப்பட்டி, நவ. 10: தேவதானப்பட்டி பகுதியில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் அதிகரித்திருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேவதானப்பட்டி பகுதியில் உள்ள சாத்தாகோவில்பட்டி, செங்குளத்துப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடியில் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருவதால், சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது. மக்காச்சோளத்தை நடவு செய்த 15 நாள் பயிரில் இருந்து புழுத்தாக்குதல் தொடங்கி விடுகிறது. இதற்கு மருந்து தெளித்தால் மீண்டும் 15 நாட்கள் கழித்து புழு தாக்குதல் ஏற்படுகிறது. மேலும் மக்காச்சோள பயிர் வளர்ந்து கதிர் பரிந்தவுடன் புழு தாக்குதல் ஏற்படுகிறது. இதனால், மீண்டும், மீண்டும் மருந்து தெளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே, வேளாண்மைத்துறை அதிகாரிகள் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த உரிய ஆலோசனை வழங்கி, மானிய விலையில் மருந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Worm attack ,area ,Devadanapatti ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...