மேலூர் அருகே அடுத்தடுத்து 3 வீட்டை உடைத்து கொள்ளை பட்டப்பகலில் பரபரப்பு

மேலூர், நவ.10: மேலூர் அருகே பட்டபகலில் அடுத்தடுத்து 3 வீடுகளை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். மேலூர் அருகே உள்ள திருவாதவூர் கலுங்குபட்டியை சேர்ந்த சகோதரர்கள் ராமமூர்த்தி, பச்சைமுத்து, சீரிரங்கம். வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர்களின் வீடுகள் மூன்றும் அடுத்தடுத்து உள்ளன. நேற்று காலை இவர்களின் மனைவிகள் மினிபிரியா(30), தாமரைசெல்வி(20), கீர்த்தனா(23) ஆகியோர் விவசாய பணிக்காக சென்று விட்டனர்.

விவசாய பணி முடிந்து மாலை வீடு திரும்பினர். அப்போது மூன்று பேரின் வீடுகளும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதில் மினிபிரியா வீட்டில் 15 பவுன் நகைக, ரூ.20 ஆயிரம் ரொக்கம், தாமரைசெல்வி வீட்டில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது. சம்பவ இடத்திற்கு மேலூர் டிஎஸ்பி ரகுபதிராஜா நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய் பொற்கை, கைரேகை நிபுணர் சுந்தரபாண்டியன் தடயங்களை சேகரித்தனர். கடந்த சில நாட்களாக மின்சாரம் கணக்கெடுப்பது போல் இப்பகுதியில் சிலர் டூவீலரில் சுற்றியதாக மக்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>