ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அர.சக்கரபாணி எம்எல்ஏ பங்கேற்பு

ஒட்டன்சத்திரம், நவ. 10:  ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அர.சக்கரபாணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.  இதில் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், சுப்பிரமணி, தர்மராஜ், தங்கராஜ், ஒன்றிய தலைவர்கள் அய்யம்மாள், சத்திய புவனா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: