×

ரங்கம் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தின் 7ம் நாளில்

திருச்சி, நவ. 10: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 3ம் தேதி தொடங்கி நாளை (11ம் தேதி) வரை நடைபெறுகிறது.
இதையொட்டி ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு 5.30 மணிக்கு வந்தடைந்தார்.

அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணி வரை நடைபெற்றது. அதுசமயம் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதேபோல 2ம் திருநாள் முதல் 6ம் திருநாள் மற்றும் 8ம் திருநாள் வரை தினமும் இரவு 7.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை நம்பெருமாள் ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாளான நேற்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார்.

பின்னர் மாலை 6.15 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின் ஊஞ்சல் மண்டபத்தில் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான 9ம் நாளான நாளை (11ம் தேதி) நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : spring festival ,Aurangzeb Temple ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த...