×

கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளிகள் திறக்க பெற்றோர் எதிர்ப்பு தலைமை ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சி


திருவாரூர், நவ.10: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தலைமை ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக வரும் 16ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறையாத நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்குமாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது மட்டுமன்றி ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 231 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இந்த கருத்து கேட்பு கூட்டமானது நடைபெற்றது. குறைந்த அளவிலான பெற்றோர்களே பங்கேற்று கருத்துக்கேட்பு கூட்டமானது நடைபெற்றது. இதில் ஒருசில தனியார் மெட்ரிக் பள்ளிகளைத் தவிர பெரும்பாலான அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என பெற்றோர் கேட்டுக்கொண்டனர். மேலும் தற்போது மழை காலம் துவங்கியுள்ளதால் பிள்ளைகளின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்குமாறும் அவர்கள் கருத்து தெரிவித்ததையடுத்து இந்த கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்திய தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது.

Tags : schools ,hearing ,head teachers ,
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...