மணவாடி பெருமாள்பட்டி காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்

கரூர், நவ. 10: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மணவாடி அடுத்துள்ள பெருமாள்பட்டி காலனி (வடக்கு) பகுதியினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்சார வசதியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவு உள்ளது. ஒரு சில பகுதிகளில் மட்டும் குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு இதுபோன்ற வசதிகள் செய்து தரப்படவில்லை. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>