பனியன் துணி வாங்கி ரூ.1.20 கோடி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்பூர், நவ.10: திருப்பூரில் ரூ.1.20 கோடி மதிப்புள்ள பனியன் துணி வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி செகண்ட்ஸ் ஓனர்கள் அசோசியேசன் சார்பில் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். இவர் சங்க உறுப்பினராக உள்ளார். அஸ்வின் இண்டர்நேஷனல் என்ற பெயரில் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் சுப்பிரமணி என்பவர் 2017ம் ஆண்டில் இருந்து கடன் அடிப்படையில் பனியன் துணிகளை எடுத்து வந்தார். தங்கப்பாண்டியும் நம்பிக்கையின் பேரில் அவருக்கு துணிகளை விற்று வந்தார். தற்போது ரூ.1.20 கோடி தர வேண்டிய நிலையில் சுப்பிரமணி பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். மேலும், வழக்கறிஞர் மூலம் போலியான புகார்களையும் அளித்து வருகிறார். எனவே, இவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்கப்பாண்டிக்கு வர வேண்டிய ரூ.1.20 கோடியை   பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More