தியேட்டர்களை திறக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர், நவ.10: திருப்பூரில் தியேட்டர்களை திறக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு திரையரங்குகளை மூட உத்தரவிட்டது. பல கட்ட பரிசீலனைக்குப்பிறகு இன்று (10ம் தேதி) முதல் பல்வேறு வழிகாட்டுதல் அடிப்படையில், தியேட்டர்களை திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. வழிகாட்டுதல்படி கிருமிநாசினி தெளித்தல், இடைவெளி விட்டு, பார்வையாளர்கள் அமர்வதற்கான குறியீடு ஏற்படுத்துதல் உட்பட பணிகளை திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நுழைவாயிலில் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, உடல் வெப்ப பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தியேட்டர்கள் திறப்புக்கு பிறகும் முறையாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>