×

கொரோனா அச்சத்தை மீறி கடை வீதிகளில் மக்கள் கூட்டம்

கோவை, நவ.10: கோவை மாவட்டத்தில் கொரோ னா நோய் பரவல் சற்று குறைந்திருக்கிறது. இருப்பினும் நோய் பரவல் பகுதிகளில் நோய் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை. நோயாளிகளின் நோய் தாங்கும் திறனின் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மாவட்ட அளவில், 400க்கும் ேமற்பட்ட வீதிகளில் கொரோனா நோய் தாக்கம் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தீபாவளியையொட்டி நகர்ப்பகுதி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒப்பணகார வீதி, பெரிய கடை வீதி, ராஜ வீதி, தியாகி குமரன் வீதி, டாக்டர் நஞ்சப்பா ரோடு, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, டி.பி. ரோடு பகுதிகளில் உள்ள வணிக கடைகளுக்கு தினமும் சுமார் 1 லட்சம் பேர் வந்து செல்வதாக தெரியவந்துள்ளது. நகரில் 100 வார்டுகளில் தினமும் 2 லட்சம் பேருக்கும் அதிகமாக வணிக, வர்த்தக கடைகளுக்கு வந்து செல்வதாக தெரிகிறது. சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை காலமாக இருப்பதால் இந்த அளவிற்கு பெரும் கூட்டம் குவிவதாக தெரியவந்துள்ளது.

வழக்கமான நாட்களைவிட, கடை வீதிகளில் மக்கள் கூட்டம் 20 மடங்கு அளவிற்கு அதிகமாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். துணிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளில் அதிகளவு கூட்டம் காணப்படுகிறது. நோய் பரவல் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகளவு வணிக கடைகள் இருப்பதால் சுகாதாரத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. போலீசார், சுகாதாரத்துறையினர் அதிக கூட்டம் உள்ள கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்துவதில்லை. கண்டுகொள்ளாத நிலையில், வணிக கடைகளில் மக்கள் குவிந்து வருவதாக தெரிகிறது. கொரோனா நோய் அச்சத்தை தாண்டி கூட்டம் குவிவதால், மீண்டும் நோய் பரவல் அதிகமாகி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஆலோசனை நடக்கும் நிலையில் அதிகளவு கூட்டம் கூடும் வணிக, வர்த்தக நிறுவனங்களை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Crowds ,shop streets ,Corona ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...